2025 ஜூலை 23, புதன்கிழமை

காணியை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரத போராட்டம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீள  பெற்றுத்தரக் கோரி, இரண்டாவது தடவையாகவும் பொதுமக்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை,  கொழும்பு பிரதான வீதி நாவலடி இராணுவ முகாம் முன்பாக, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி மக்கள் 1968ஆம் ஆண்டு முதல்  குறித்த காணியில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தற்போது நல்லாட்சி அரசின் மூலம் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் நிலையில் தங்களுடைய காணியையும் பெற்றுத் தருமாறு கோரியே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணி உரிமையாளர்கள் எட்டு பேர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

'நல்லாட்சி அரசே அதிகளாக்கப்பட்ட எமக்கு, நாம் இழந்த காணியை வழங்கு', '8 ஏக்கர் காணியில் 4 ஏக்கர் காணி இராணுவ முகாமிக்கு எடுத்துக்கொண்டு மிகுதி 4 ஏக்கர் காணியை எமக்கு வழங்கு', 'இராணுவ கட்டளையிடும் அதிகாரியால் விடுக்கப்பட்ட காணியை எமக்கு வழங்கு' போன்ற வாசகங்கள் எழுதிய பதாதகளை தாங்கிய வண்ணம்  மேற்படி எட்டுபேரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .