2025 மே 19, திங்கட்கிழமை

காத்தான்குடி நகர சபையின் ஒன்றுகூடல் மண்டபம் தயார்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நடத்துவதற்கான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதென, காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி பாத்திமா றிப்கா ஷபீன் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நடத்துவதற்கென, சபா மண்டபம், தவிசாளர், பிரதி தவிசாளர் இருக்கும் அறைகள் ஆகியன காத்தான்குடி நகர சபையில் இல்லாதிருந்த நிலையில் இருந்தது.

தற்போது இவை அமைக்கப்பட்டு, அதன் நிர்மான வேலைகள் நிறைவடைந்துள்ளதென, செயலாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் 10ஆம் திகதி, காத்தான்குடி நகர சபை தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து தெரிவு செய்யப்படும் உறப்பினர்கள், உடனடியாகக் கூட்டங்களை நடத்தக் கூடிய வகையில், வசதியாக மண்டபம் அமைக்கப்பட்டு, அதன் வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X