Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,
மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்களில், 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் 27ஆவது வருட நினைவு தினம், அப்பகுதி மக்களால் உணர்வுபூர்வமாக இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டது.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹூசைனியா பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில், 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி, புனித இரவு ரேத்தொழுகையான இசாத்தொழுகையில் ஈடுபட்ருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுத்தாக்குதல்களில் 103 பேர் கொல்லப்பட்டதுடன் 264பேர் படுகாயமடைந்தனர்.
நினைவு தினத்தையொட்டி, பள்ளிவாசல்களில் குர்ஆன் ஓதுதல் மற்றும் பிராத்தனை சுஹதாக்கள் பற்றிய சிறப்புரைகள் இடம்பெற்றன. அத்துடன், கறுப்பு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு, துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
3 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
2 hours ago