2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காத்தான்குடி வர்த்தக நிலையங்கள் வழமைக்கு திரும்பின

Princiya Dixci   / 2021 ஜனவரி 24 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த காத்தான்குடி நகரின் ஒரு பகுதி வர்த்தக நிலையங்கள், இன்று (24) காலை முதல் திறக்கப்பட்டன.

கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு, கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி முதல்  தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

தொடரான அன்டிஜன் பரிசோதனைகளை அடுத்து குறித்த பிரதேசத்தின் 8 கிராம சேவையளர் பிரிவுகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.

தனிமைப்ப்த்தல விலக்கப்பட்ட பகுதியிலுள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கெர்ளப்பட்டு, அவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன், பின்னர் இன்று முதல் வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்தியகாரி டொக்டர் ஏ.எல்.நபீல் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட 8 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இன்று முதல் வழமையான அலுவல்கள் நடைபெற்று வருகின்றன.

பிரதேசத்தின் ஏனைய 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .