2025 மே 03, சனிக்கிழமை

காத்தான்குடியில் கிருமி நாசினி விசிறும் நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.சக்தி 

கெவிட் -19 தொற்றுக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் முற்றாக பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் முடங்கியிருக்கும் இந்நிலையில் மாவட்டத்தில் அரச நிருவாகக் கட்டமைப்பினரும் முப்படையினரும் இணைந்து பல்வேறுபட்ட சுகாதார முன்னாயர்த்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதன் ஓர் அங்கமாக களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர், காத்தான்குடி நகரசபை, பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (19) காத்தான்குடிப் பிரதேசத்தில் கிருமிநானிசினி விசிறி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது பஸ் தரிப்பிடங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் பணிமனைகள், பொதுக் கட்டடங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும், இக்கிருமிநாசினி விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X