2025 மே 10, சனிக்கிழமை

காரும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

Freelancer   / 2022 ஏப்ரல் 11 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி        

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த காரில் தாய், தந்தை, மற்றும் அவர்களுடை இரு பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.

காரில் பயணித்த நால்வரும், பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X