Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 மார்ச் 25 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீணடித்துவருவதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் குற்றஞ்சாட்டினார்.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பைப் பயன்படுத்தி, தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க, கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையகத்தில், நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இந்தியாவைக் காட்டி அரசியல் செய்தவர்கள், இன்று ஜெனீவாவைக் காட்டி அரசியல்செய்துவருகின்றனர் எனவும் ஐ.நா சென்று, இலங்கை அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்குவது யார் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்டத்தில், தமிழர்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதற்கும் பேரம் பேசுவதற்கும் நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறிய அவர், இந்த வரவு - செலவுத் திட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்கப்போகின்றதெனக் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், தமிழர்களுக்கான ஆகக்குறைந்த அடிப்படைத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகப் பேரம்பேசி வாக்களிக்கப்போகின்றதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்கப்போகின்றதா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, எங்களுடைய மக்களை எவ்வாறு கரைசேர்க்கலாம், எவ்வாறு ஜனநாயக உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே அரசியலாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago