2025 மே 21, புதன்கிழமை

கிரானில் வறிய மக்களுக்கு உதவி

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில், வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சால், நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கு தையல் இயந்திரம், மண்வெட்டி, மருந்து விசுரும் கருவி, மேட்டு நில பயிர்செய்கைக்காக சோளன், கச்சான் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 400 குடும்பங்களுக்கு பதினாறு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பொருட்களைப் பயனாளிகளுக்கு பகிர்ந்தளித்தார்.

இந் நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர்கள், பிரதேச செயலக உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .