2025 மே 03, சனிக்கிழமை

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்; போராட்டத்தில் ஈடுபட முஸ்தீபு

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காகிதநகர் 210டீ கிராமசேவை அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைதுசெய்யுமாறும் இல்லையேல் மாவட்டம் தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

காகிதநகர் 210டீ கிராமசேவை அதிகாரி மீது வெள்ளிக்கிழமை (18) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில்,  பாதிக்கப்பட்ட கிராம சேவகர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இதுவரையிலும் குறித்த நபர் கைதுசெய்யப்படவில்லை என்று, மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.  

தாக்குதலுடன் தொடர்புடையவர், உடனடியாக கைதுசெய்யப்படாமல் விட்டால், மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கடமை செய்யாமல் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக, ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X