2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிராம மட்ட கலந்துரையாடல்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.சுதாகரன்

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதியின் செயலணியின்  தலைவரும் நிதி அமைச்சருமான பெசில்  ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கு அமைய, எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்தில் (2022) ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் 3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கிராம உத்தியோத்தர் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் கிராமத்துடனான உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான கலந்துரையாடல், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏறாவூர் 5 கிராம சேவையாளர் பிரிவிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், தமிழ் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.

இதன் போது, கிராம மட்ட சுயதொழில் ஊக்குவிப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், விவசாயம், மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி, சுற்றுச் சூழல் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இனங்காணப்பட்டு கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .