2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’கிராமியத் தொழில்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பங்களிப்புத் தேவை’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிராமியத் தொழில் முயற்சிகளில் பெண்; தலைமைத்துவக் குடும்பங்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி திருமதி நீனா பிறான்ட்ஸ்ரப் பிறாண்ட்ஸ்ரப் தெரிவித்தார்.

மட்டக்களப்புப் பிராந்திய கால்நடை பயிற்சி நிலையம், கல்லடியில் புதன்கிழமை (28)  மாலை திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உட்பட 7 மாவட்டங்களில் 880 திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

விவசாயம், நவீன தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அவற்றுக்காகவே, இவ்வாறான பயிற்சி நிலையங்களை அமைத்து, அவற்றின்; மூலம் சிறந்த கால்நடை அதிகாரிகள் மற்றும் பண்ணையாளர்களை உருவாக்க நாம் உதவி வருகின்றோம்.
இந்தப் பயிற்சி நிலையத்தின் மூலம் வருடமொன்றுக்கு 150 கால்நடை உத்தியோகத்தர்களுக்கும்; 600 பண்ணையாளர்களுக்கும் பயிற்சி அளிக்க முடியும்' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X