2025 மே 14, புதன்கிழமை

கிருமி நாசினியை ருசி பார்த்தவர் உயிரிழப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிருமி நாசினியைப் பருகி ருசி பார்த்த குடும்பஸ்தர் ஒருவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளாரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.‪

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள பெரியபுல்லுமலை கிராமத்தைச் சேர்ந்த புஞ்சிபண்டா ரவிச்சந்திரன் (வயது 33) என்பவரே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (14) மரணித்துள்ளார்.

இவர், கடந்த 05ஆம் திகதி, மதுபோதை தலைக்கேறிய நிலையில், குடிபானமென நினைத்துப் பயிர்களுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியைப் பருகியுள்ளார்.

அவ்வேளையில் உளறிய நிலையில் காணப்பட்டவரை, கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் உறவினர்கள் சேர்ப்பித்து, முதலுதவிச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கரடியனாறு பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .