2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘கிளினிக் மருந்துகள் வீடுகளுக்கு வரும்’

Princiya Dixci   / 2021 மே 11 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப்  பரவல் தற்போது அதிகரித்து வருவதால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்குரிய மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்குவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, நோயாளர்கள் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அவ் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தங்களது கிளினிக் இலக்கத்துடன், தங்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய நிபுணரது பெயர் என்பவற்றை வழங்கி, மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்காக, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 09 மணி முதல் மாலை 03 மணிவரை வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்களான 065 313 3330 மற்றும் 065 313 3331 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X