2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கில் பலத்த மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Editorial   / 2022 ஜனவரி 03 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி       

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிப்படைந்துள்ளது.

இன்று (03) நள்ளிரவு முதல் எதிர்வரும் நாளை 04ஆம் திகதி வரை பெரும்பாலும் பொத்துவில்,  கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் மழையும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் ஓரளவு மழையும் பெய்யும் சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (03) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 54.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.

இதனால், புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, நாவற்குடா, வாகரை மற்றும் கொக்கொடிச்சோலை உட்பட பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ளதுடன் பெரிய குளங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், 31அடி கொள்ளளவுடைய நவகிரிக் குளத்தின் நீர் மட்டம் தற்போது 26 அடி 4 அங்குலமாகவும், 17 அடி 25 அங்குலம் கொள்ளளவுடைய தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 15 அடி 2 அங்குலமாகவும் ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல உள் வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்களிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X