2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிழக்கு ஆளுநர் ஏறாவூர் விஜயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் குறைகேள் சேவையொன்றை நடத்தும் முகமாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நாளைமறுதினம் (29) ஏறாவூர் நகர பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர பிரதேசத்திலும் அதனை அண்டிய ஏறாவூர்பற்றுப் பிரதேசத்திலும் பொதுமக்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளைப் பற்றி அறிந்து அவற்றுக்குத் தக்க தீர்வு காண்பதற்காகவே ஆளுநரின் இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, பொதுமக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை உள்ளடக்கும் இந்த குறைகேள் சேவையில் பொதுமக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆளுநரிடம் முன்வைக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அன்றைய தினம் காலை ஒன்பது மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் ஆளுநரின் குறைகேள் அமர்வை நடத்த அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .