2025 மே 03, சனிக்கிழமை

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தால் நிவாரண உதவிகள்

Editorial   / 2020 மே 07 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரோனா வைரஸ் காரணமாக, தொழில் பாதிப்புற்றிருக்கும் குடும்பங்களுக்கான முதற்கட்ட நிவாரண உதவிகள் வழங்கும் செயற்றிட்டம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு - கித்துள், வெலிக்காகண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கமைவாக, தொழில் அற்ற நிலையில் மிகவும் பாதிப்புற்றிருக்கும் 25 குடும்பங்களுக்கான அத்தியவசிய உலர் உணவுப்பொதிகள், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் குறித்த பிரதேசங்களில் வைத்து நேற்று முன்தினம் (06) மக்களிடம் வழங்கிவைக்கப்பட்டன.

மக்கள் நலன் காப்பகத்தின் நிதி பங்களிப்புடன், ஒரு குடும்பத்துக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய பொருள்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X