2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் வீதிக்கு இறங்கினர்

Freelancer   / 2022 மே 10 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காலிமுகத்திடலில் “கோட்டா கோ ஹோம் கம” மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு, ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையாரடி வரையும் ஊர்வலமாக சென்று அங்கு சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவார்கள் என்ற அச்சத்தையடுத்து, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X