Princiya Dixci / 2021 மே 17 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
“கிழக்கு மாகாண மக்களும் தமது வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை உணர்வு பூர்வமாக நினைவு கூருவோம்” என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடக செயலாளரும், அக்கட்சியின் பட்டிருப்புத் தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான மக்களின் நினைவுகூரும் தினம் மே 18 ஆகும்.
“முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கத்தை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வணக்கஸ்தலங்களில் 2010 மே 18 தொடக்கம் பல இக்கட்டான காலங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளது.
“அதேபோல இந்த வருடமும் கொரோனா தாக்கத்தை கருத்தில்கொண்டு, சுகாதார நடைமுறைகளைப் பேணி நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கான சில ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
“அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வாலிபர் அணி தலைவர்கள், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் என 22 பேருக்கு நீதவான் நீதுமன்றங்கள் மூலமாக தடை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
“இந்தத் தடை உத்தரவுகளை மதித்தும், நாளை (18) மாலை 6 மணிக்கு அல்லது பொருத்தமான ஒரு நேரத்தில் அனைவரைம் இல்லங்கள் தொறும் விளக்கேற்றி, உயிர்நீத்த உறவுகளை நினைந்து 2 நிமிட அகவணக்கம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்” என்றார்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025