2025 ஜூலை 23, புதன்கிழமை

கிழக்கு மாகாண அரசியலில் இணக்கம் அல்ல பிணக்கம்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

 

கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் முதலமைச்சர் நஸீர் அகமட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்காது பிரதமரை கூட்டிவந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நடத்தியது பிணக்க அரசியல் செய்வதைப்போல் உள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெவித்தார். 

கிழக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சர்கள் இனம், மதம், ஊருக்கு அமைச்சர்களாக இருக்காமல் மாகாணம் முழுவதும் பணியாற்றக்கூடிய அமைச்சர்களாக மாறவேண்டும் என்றும் அவர் தெவித்தார். 

தமிழ் மக்களின் வெறுப்பபைக் பெறக்கூடிய விதத்தில் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு முதலமைச்சரும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எந்த இனமாக இருந்தாலும் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய முதலமைச்சரே  எமக்குத் தேவை. தேர்தலில் ஆட்சியமைக்க ஒரு முகத்தைக் காட்டிவிட்டு, அபிவிருத்தி விடயத்தில் வேறு முகங்காட்டுகின்ற பாசாங்குத் தன்மை அரசியலில் இருக்க கூடாது என்றும் அவர் தெவித்தார். 

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரச தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (03) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றவுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட், த.தே.கூ. எம்.பிக்ளை அழைக்காது கூட்டம் நடத்தியுள்ளார். அபிவிருத்தியை மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அபிவிருத்தி செய்யும்போது வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். 

“நாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும்போது எங்களுக்குத் தெரியாமல் அவசரமாக அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நடத்துவதற்கான தேவை ஏன் ஏற்பட்டது. 

“கிழக்கு மாகாணத்தில் அவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது. அந்த பாரிய பங்களிப்பை பெற்றவர்கள் நன்றியை மறந்து செயற்படுகிறார்கள். இது எங்களுக்கு வேதனையான விடயமாகும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .