Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம், எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் வழங்கப்பட்வுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டின் போதே, ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சைக்கு 6,000 பேர் வரைத் தோற்றியிருந்ததார்கள். அவர்களில் சுமார் 2,500 பேர் சித்தியடைந்ததனர்.
சித்தியடைந்தவர்களில் உரிய தகைமைகளைக் கொண்டவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம், திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
அத்துடன், ஆங்கில டிப்ளோமாதாரர்கள் 172 பேருக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம், மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரியில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர், இதன்போது தெரிவித்தார்.
மேலும், “கிழக்கு மாகாண மக்களுக்கு கிரமமான சேவையை வழங்கும் நோக்குடன், எனது தலைமையில் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேவைகள் வழங்குகின்றபோது இன, மத, மொழி வேறுபாடுகள் கருத்தில்கொள்ளப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நீதி, நியாயமான முறையில் சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். கிழக்கு மாகாணத்தை சகல துறையிலும் கட்டியெழுப்புவதே எமது பிரதான நோக்கம்” என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago