Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 19 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்.வா.கிருஸ்ணா
யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் போராளிகள், பொதுமக்கள் என 14,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்;ந்த 1,442 உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்னம் தெரிவித்தார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் என்னவென்று தெரியாது.
'வடமாகாணத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேரும் கிழக்கு மாகாணத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் 36 பேரும் இருக்கின்றனர்.
'கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் 40 சதவீதமும், முஸ்லிம்கள் 37 சதவீதமும், சிங்களவர்கள் 23 சதவீதமுமாக உள்ளார்கள்.
'இந்நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு 95 சதவீதம் வாக்களித்தால், தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.
40 சதவீதமாக தமிழர்கள் உள்ள கிழக்கு மாகாணத்தில், தேர்தலின்போது 50 சதவீதமானோரே வாக்களிக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்காமல் விட்டிட்டு, தமிழ் முதலமைச்சரைப் பற்றி நாம் கதைக்க முடியாது.
எனவே, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு 95 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
20 minute ago
34 minute ago