2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் பட்டிமன்றக் குழு

கனகராசா சரவணன்   / 2018 மே 28 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் மத்தியில் நகைச்சுவை ஊடாக சமூகப் பிரச்சினைகளை விழிப்புணர்வூட்டும் வகையில், கிழக்குமாகாண பட்டிமன்றக்குழுவென்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பட்டிமன்றங்கள், வில்லுப்பாட்டு மூலமாக தற்போது சமூகத்தில் நிலவும் நுண்கடன் பிரச்சினைகள், அருகிவரும் பாரம்பரிய கலைகள் தொடர்பில் நகைச்சுவை கலந்த பாணியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டப்படவுள்ளன.

இக்குழுவில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளங்கலைஞர்கள், பேச்சாளர்கள், ஆர்வமுள்ளவர்கள் இணைந்துகொள்ள முடியும்.

இக்குழுவினர், கிழக்கிலுள்ள கிராமங்கள் தோறும் சென்று, இலவசக் கலைச் சேவையை முன்னெடுக்கவுள்ளனர்.
எதிர்வரும் ஜுன் மாதம் மட்டக்களப்பு நகரில் மாபெரும் பட்டிமன்றமொன்று அரங்கேற்றப்படவுள்ளது.

கிழக்கு மாகாண பட்டிமன்றக்குழுவின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக இளங்கலைஞர் அ.அச்சுதன், மட்டக்களப்பு கவிஞர் சௌந்.லோரன்ஸோ, அம்பாறை கவிஞர் அகரம் செ.துஜியந்தன் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

இதில் இணைந்து கொள்ளவிரும்பும் கலைஞர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்களைக் குறிப்பிட்டு, 0754303309 என்ற இலக்கத்துக்கு குருந்தகவல் அனுப்பிவைக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X