Princiya Dixci / 2021 ஜூன் 07 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா, எம்.எஸ்.எம். ஹனீபா
இலங்கைக்குக் கிடைத்துள்ள 4 இலட்சம் 'சைனோஃபாம்' கொவிட் தடுப்பூசிகளில் கிழக்கு மாகாணத்துக்கு 75,000 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.
தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ், கொரோனாப் பாதிப்பின் அடிப்படையில் நாட்டிலுள்ள 7 மாகாணங்களுக்கு இந்த 4 இலட்சம் தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (08) முதல் 'சைனோஃபாம்' கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
“கிழக்கு மாகாணத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை பிராந்தியங்களுக்கு 75,000 தடுப்பூசிகளும் தலா 25,000 வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
“அதேவேளை, பாதிப்புக் குறைவாக உள்ள கல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தகட்ட தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படவிருக்கிறது.
“இத்தடுப்பூசியை, 3 தொகுதியினராக வகைப்படுத்தி வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் உள்ள தொற்றா நோயாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
“அத்தோடு, அரச ஊழியர்கள், கர்ப்பிணிகள், கொவிட் 19 தடுப்பு முன்னணிச் செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கும் இத்தடுப்பூசியை வழங்க உத்தேசித்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு தலா 75,000 'சைனோஃபாம்' தடுப்பூசிகளும் தெற்கு, வட மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு தலா 50,000 'சைனோஃபாம்' தடுப்பூசிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
58 minute ago
1 hours ago