Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.ஏ.காதர், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு, “கிழக்குக்கான உறவுப்பாலம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளடங்களாக நடமாடும் சேவையில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக நேற்று (11) வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
குறித்த நிவாரணப் பொருட்களை, யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணராஜா கிருஷ்ணமீனன் தலைமையில் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
நிவாரணப் பொருட்களில் சீனி, தேயிலை, பால்மா, பிஸ்கெட், பணிஸ், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சவர்க்காரம், குழந்தைகளுக்கான ஆடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025