2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘கிழக்குக்கு அதிகாரம்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட இருக்கின்றது” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் கணக்காளருமான எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அபிவிருத்தியை நோக்கிய மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைக்கு அதிகாரங்கள், எழுத்திலே வழங்கப்பட்டிருந்தது. 13ஆவது அரசியல் திருத்தத்திலே 95 சதவீத அதிகாரம் கல்விக்கும் சுகாதாரத்துக்கும், 99 சதவீதத்துக்கு மேல் உள்ளூராட்சி அதிகாரம் மாகாண சபைக்கு உள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .