Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 ஜனவரி 07 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் 1ஆவது பொதுக்கூட்டம், மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள சத்துணா ஹோட்டலில் எதிர்வரும் சனிக்கிழமை 12ஆம் திகதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்தப் பொதுக் கூட்டத்தில், ஒன்றியத்தின உத்தியோகபூர்வ நிர்வாக சபை தெரிவு செய்யப்படவுள்ளதுடன், ஒழுங்கு விதிகள் தொடர்பான அங்கிகரித்தல் என்பன நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டத்துக்கான செயலாளர் பொறியியலாளர் வைரமுத்து பரமகுருநாதன் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்துக்கான ஆரம்பச் செயற்பாடுகள் இணைப்பாளர்களான செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி கே.சிவநாதன் ஆகியோர் ஊடாக மேறகொள்ளப்பட்டு, கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அமபாறை மாவட்டஙகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு தற்காலிக நிர்வாகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஆரம்பக்கட்டச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் அரசியல் செயற்பாடு குறித்த கட்சிகள் அனைத்துக்குமான கூட்டம் நடைபெற்று கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் கட்சி அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், கட்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதில் தமிழர் மகா சபை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஈ.பி.டிபி ஆகிய கடசிகள் கைச்சாத்திட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
12ஆம்திகதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அனைத்து தற்காலிக நிர்வாகத்தினரும் கலந்துகொள்ளவுள்ளதுடன், கிழக்கின் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தற்காலிக நிர்வாகத்தின் செயலாளர் பொறியியலாளர் வைரமுத்து பரமகுருநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago