2025 மே 07, புதன்கிழமை

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அம்பாறைக் கூட்டம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான கூட்டுச் ஜனநாயகப் பணிக்குழு உறுப்பனர்களைத் தெரிவுசெய்யும் கூட்டம், கிழக்குத் தமிழர் கூட்மைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில், காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நேற்று (03) நடைபெற்றது.

இதன்போது, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், அதன் செயற்பாடுகள் தொடர்பில் தலைவர் கோபாலகிருஸ்ணனினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கூட்டு ஜனநாயகப் பணிக்குழுவின் விடயங்கள் பற்றி அதன் இணைப்பாளர் சிவரெத்தினமினால் விளக்கமளிக்கப்பட்டன.

அதன்பின்னர், மட்டக்களப்புக் கூட்டத்தில நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்திலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் இறுதியில், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத் தேர்தல் தொகுதிகளுக்கான இணைப்பாளர்கள் தெரிவு நடைபெற்றது.

இதன்போது, பொத்துவில் தொகுதிக்காக மக்கள் செயற்கழகத்தின் தலைவர் நி.பிரசாந், கல்முனைத் தொகுதிக்காக தமிழர் மகா சங்கத்தின் அம்பாறை மாவட்டச் செயலாளர் து.இராமகிருஸ்ணன், சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சே.புஸ்பராசா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X