2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடம் திறப்பு

கனகராசா சரவணன்   / 2018 ஜூன் 12 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இனிமேல் பகடிவதை தொடராது என, மருத்துவ பீட மாணவர்களால் பீடதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து, நாளை (13)  முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மருத்துவ பீடம் திறக்கப்படவுள்ளதென, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் திருமதி ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பகடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் கலவரையற்று மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவ பீட மாணவர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், பகடிவதை இனி மேலும் தொடராது என்று மருத்துவ பீட மாணவர்களால் பீடதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியைப் பரிசீலனை செய்த கிழக்குப் பல்கலைக்கழக மூதவை பீடம், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்க ஆவன செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X