2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பூட்டு

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த அனைத்துப் பீடங்களுளையும் இன்று (17) முதல் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதியிலுள்ள சகல மாணவர்களும், நாளை (18) வெள்ளக்கிழமை பகல் 12 மணிக்கு முன்பு தங்களுடைய உடமைகளுடன் வீடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகத்தின் பேரவை, திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஆகியவற்றை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .