Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே, தம்மிடமுள்ள அரசுடமைகளை திருப்பி ஒப்படைப்பதில், அம்மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் சிறந்த முன்மாதிரியைக் காட்டியுள்ளதாக, தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி பாராட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம், எதிர்வரும் 30.09.2017ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபையினால் தனக்கென வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும் எஞ்சிய அலுவலக பொருட்கள் என்பனவற்றை, நேற்று (25) கிழக்கு மாகாண சபைக்கே மீண்டும் கையளித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 85ஆவதும் இறுதியுமான அமர்வு கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி தலைமையில் நேற்று (25) நடைபெற்றது.
இதன்போது சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கிழக்கு மாகாண சபையினால் தனக்கு வழங்கப்பட்டிருந்த காலை, மதிய மற்றும் மாலை நேர உணவுகளுக்காக, தனக்கென மாகாண சபையால் செலவு செய்யப்பட்ட தொகை அடங்கலாக 67,428.40 ரூபாய்க்கான காசோலை, மற்றும் தனது அலுவலக நடவடிக்கைகளுக்கென வழங்கி வைக்கப்பட்ட கடித தலைப்பு காகிதாதிகள், பைல் அட்டைகள், கடித உறைகள், காகிதங்கள் உள்ளிட்ட எஞ்சிய அனைத்து அலுவலக பொருட்களையும் கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் எம்.சீ.எம். செரீப் முன்னிலையில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளரிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
48 minute ago
51 minute ago