Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
தம்பிப்பிள்ளை தவக்குமாரன் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் குடிநீர், மின்சார வசதிகள் இன்றி மக்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுவான்கரை பிரதேசத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமங்களான காட்டுவாசல் மற்றும் மாதிரிக்கிராம மக்கள், இன்று வரை குடிநீர் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராமங்களில் சுமார்125 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பு தொழிலே காணப்படுகின்றன.
ஆனால், அன்றாடம் குடிப்பதற்கு குடிநீர் இன்றி அவர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பிரதேசங்களுக்கு நீர் குழாய்கள் மூலம் நீர் வழங்கப்பட்டு வருந்துள்ளதாகவும், தங்களது கிராமங்கள் மட்டும் பின்தள்ளப்பட்டுள்தாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை மற்றும் பாம் பவுண்டேசன் போன்ற நிறுவனங்களிடம் நீர்க்குழாய்களைப் பொருத்தி குடிநீரைப் பெற்றுத்தரும் படி விண்ணப்பங்களை கொடுத்திருந்ததாகவும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
தாங்கள் அன்றாடம் குடிநீரைப் பெறுவதற்கு சுமார் 1 கிலோமீற்றர் தூரம் செல்லவேண்டியிருப்பதாகவும், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள், இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
37 minute ago