Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
“மோதல் மற்றும் இடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என்பவற்றில் நாம் அக்கறை கொண்டுள்ளோம்” என, யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிக்குழுத் தலைவர் கலாநிதி அன்ரூவ் சிஸன் தெரிவித்தார்.
யூ.எஸ்.எயிட் நிறுவனத்தால் உதவியளிக்கப்படும் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்திருந்த அவர், நேற்று (26) சித்தாண்டி ஸ்ரீ இராம கிருஷ்ண வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார். இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொரடந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அதிலும் சுத்தமான குடிநீர் மிக அவசியம். யூஎஸ்.எயிட் நிறுவனத்தால் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் பணி இலங்கையில் மோதல் மற்றும் இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பின் நீர்த் தேவையுள்ள 5 பிரதேசங்களில் பாடசாலைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான எமது பணியில் இதுவரை இதுவரை 45 பாடசாலைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களும், 5 ஆயிரம் குடிமனைகளுக்கு நீர் இணைப்புகளை வழங்குவதன் மூலம் 20 ஆயிரம் பேரும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள வழியேற்பட்டுள்ளது.
மேலும், யூ.எஸ்.எயிட்டின் நிதி உதவியைக் கொண்டு பாம் பவுண்டேசனுக்கூடாக 2012ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2700இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நன்மைய பயக்கக் கூடியதாக நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், 40 கிணறுகள் அமைக்கப்பட்டும் மேலும் 1600 கிணறுகள் புனரமைக்கப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் குடிநீரைப் பெறுவதற்காக மக்கள் மைல் கணக்கில் கால்நடையாகச் சென்று குடங்களில் நீரைச் சுமந்து வந்த சிரமத்தை நான் நேரடியாகக் கண்ணுற்றுள்ளேன்.
அந்தக் கஸ்டங்களை நீக்கி இப்பொழுது உள்ளூர் சமூகத்தின் காலடிக்கே நாம் சுத்தமான நீரைக்கொண்டு வந்து சேர்த்துள்ளோம்.
அமெரிக்க மக்களின் உதவி கொண்டு இந்தத் திட்டம் முழுமையான வெற்றியடைந்துள்ளதையிட்டு, நான் ஒரு அமெரிக்கப் பிரஜை என்கின்ற வகையில் பெருமையடைகின்றேன்.
பொதுவான இலக்கை நோக்கி எல்லாத் தரப்பினரும் இணைந்து செயற்படும்போது நன்மைகள் கிட்டும் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த சான்றாகும். வரட்சியிலிருந்து மீட்சி பெற உங்களுக்கு இந்தத் திட்டம் பெருந்துணை புரியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago