2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குடிநீர் வழங்கக் கோரி வவுணதீவு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மார்ச் 12 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், நடராஜன் ஹரன், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் இதுவரை குடிநீர் வழங்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, நேற்று (11) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்

வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக  இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், குடிநீர்ப் பஞ்சத்திலுள்ள உன்னிச்சை, நெடியமடு, காந்திநகர், பாவற்கொடிச்சேனை, ஆயித்தியமலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்த்த பெருமளவான மக்கள் ஈடுபட்டனர்.

தமது உன்னிச்சை கிராமத்தில் அமைந்துள்ள குளத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்கப்படும்போது, குளத்தை அண்டிய தமது கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படாதது பெரும் அநீதியானது என, கிராம மக்கள் தெரிவித்தனர்

இதன்போது,  “அரசே உடனடியாக குடிநீரை வழங்கு”, “நீர் இன்றி யார் வாழ முடியும் - நாங்கள் என்ன பாவம் செய்தோம்?”, “அசுத்தமான குடிநீரை பருகி வரும் எமக்கு, சுத்தமான குடிநீரைத் தா”, “எம்மை ஆரோக்கியமாக வாழ விடு” போன்ற கோசங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் வருகை தந்து, இவ்விடயம் தொடர்பில் தாம் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தொடர்ந்து இதனை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தமது நிதியொதுக்கீட்டில், எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள், குறித்த பகுதி மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்துவைக்க நடவடிக்கையெடுப்பதாகவும் அவர்கள் வழங்கிய உறுதிமொழியையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X