Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், இன்று (20) நீக்கியுள்ளது.
மேல் நீதிமன்றில், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜாவால் குறித்த தடையை நீக்குமாறு கோரும் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின், குறித்த தடையுத்தரவை நீக்கியதுடன், இது தொடர்பான விசாரணையை எதிர்வரும் 04ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில், கடந்த மாதம் 22ஆம் திகதி ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மக்கள் குறித்த நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில், கழிவுகளைக் கொட்டுவதை தடுக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், அப்பகுதி மக்களால் வழக்கு தொடரப்பட்டு, எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் அப்பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை காரணமாக, மட்டக்களப்பு நகரில் கழிவுகளை அகற்றுவதை மட்டக்களப்பு மாநகரசபை இடைநிறுத்தியதன் காரணமாக, மட்டக்களப்பு மாநகரம் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .