Freelancer / 2022 ஜூலை 12 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் செயலக உத்தியோகத்தர்களும், பிரதேச மக்களும் கலந்து கொண்டு இரத்த தானத்தினை வழங்கி வைத்தனர்.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் ரி.தவனேசன் தலைமையிலான, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இரத்த தானத்தினை திறம்பட மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை ஓளரவு நிவர்த்தி செய்யும் வகையில் செயலக உத்தியோகத்தர்களும், பிரதேச மக்கள் மூலம் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.

23 minute ago
30 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
41 minute ago
1 hours ago