Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
குற்றங்களுடன் தொடர்புபடாதவர்கள் கைதுசெய்யப்பட்டு, நீண்ட நாள்கள் தடுத்து வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.
வவுணதீவில், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - காந்தி பூங்காவில்,தனது கணவனை விடுதலை செய்யக்கோரி, நான்கு பிள்ளைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அஜந்தன் எனப்படும் சி.ராஜகுமாரனின் மனைவியை, இன்று (17) பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன், பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் து.மதரன், இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அலைபேசியில் தொடர்புகொண்ட ஸ்ரீநேசன் எம்.பி, குறித்த கைது தொடர்பான விவரங்களைத் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பான தகவல்களைப் பெற்று, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளை, ஸ்ரீநேசன் எம்.பி இதன்போது மேற்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago