Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கிய 6 பாடசாலைகளுக்கு, வேள்ட் விஷன் நிறுவனத்தின் நிதியுதவியுடன், குழாய் நீர் விநியோகத்திட்டம், நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டது.
சந்திவெளி- சித்தி விநாயகர் வித்தியாயலம், கனிஷ்ட வித்தியாலயம், முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை, கோரகல்லிமடு ரமண மகரிஷி, கிரான் மத்திய கல்லூரி, விவேகானந்தா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளுக்கே, குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டது.
கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயத்தில் அதிபர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, வேள்ட் விஷன் கிரான் பிராந்திய அபிவிருத்தித் திட்ட முகாமையாளர் ஹிந்துறோஹாஸ், சுகாதாரம் மற்றும் போஷாக்குத்திட்ட அதிகாரி ரீ. றொசாந்தன் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்பிரதேசத்து நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என சுகாதாரத்துறை அதிகாரிகளது அறிக்கையில் தெரிக்கப்பட்டதையடுத்து, பாடசாலை மாணவர்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதனைக் கவனத்திற்கொண்டு குழாய்நீர் இணைப்பை வழங்க வேள்ட் விஷன் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .