Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.அனிதா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்கிறதென, தமிழ் மக்கள் சுதந்திர முன்னனியின் தலைவரும் முன்னால் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பேத்தாழையில் நேற்று (26) நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது உரையில் அவர் மேலும் கருத்துரைக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சை கேட்டு தமிழ் மக்கள் ஏமாந்து விட்டனர் எனவும் சிங்கள மக்கள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்றினார்கள் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், தற்பொழுது இருக்கின்ற அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத் தங்களுடைய உரிமைகளைப் பேரம் பேசி பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலமை காணப்படுவதாகவும் இதற்கு முக்கிய காரணமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எனவும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய அவர், இவர்கள் அரசியலில் இருந்து கொண்டு தாங்கள் ஆடம்பர வாழ்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் தமிழ் மக்களுக்காக எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.
இனி வருகின்ற காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடாமல், தமிழ் மக்களைச் சிந்தித்துச் செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago