Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜவ்பர்கான்
காங்கேயனோடையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் காங்கேயனோடை வாவிக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் காங்கேயனோடை 13யைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43வயதுடைய உதுமாலெவ்வை முகம்மட் இல்பான் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவம் இடம் பெற்ற இடத்தினை பார்வையிட்டார்.
இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியாசலைக்கு சென்று அங்கு உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனைகளை மேற் கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலத்தை கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரான காங்கேயனோடையைச் சேர்ந்த கையூம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் எனவும் அன்மையிலேயே இவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago