2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கைக்குண்டு மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளங்குடா இந்து மையானத்திலிருந்து சக்தி வாய்ந்த கைக்குண்டொன்று, நேற்று (27) மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கயான் ராஜகருண தலைமையிலான பொலிஸ் குழுவினர், இந்தக் கைக்குண்டைக் கைப்பற்றினர்.

இந்தக் கைப்குண்டை, குண்டு செயலிழக்கும் படையினர் செயலிழக்கச் செய்துள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .