2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கையெழுத்துப் போராட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 14 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக, கையெழுத்துப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட கால எல்லைக்குள் பட்டப்படிப்பு பூர்த்திசெய்யப்பட்டு, பட்டத்துக்கான சான்றிதழ் விரைவில் வழங்கப்பட வேண்டும்; மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்; போலியான தீர்வை வழங்காமல், விடுதிப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்; மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்; பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சி.சி.டி.வி கமெராக்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளே, இதன்போது முன்வைக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்வரை, தமது ஜனநாயக ரீதியான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என, கிழக்குப் பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றிய மாணவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X