2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

கொக்கட்டிச்சோலையில் மிதி வெடி மீட்பு

Janu   / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி வயல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில்  மிதிவெடி ஒன்று திங்கட்கிழமை (20) இரவு மீட்கப்பட்டுள்ளது.

அரசடி நெற்களஞ்சிய சாலைக்கு முன்னால் உள்ள வயல் நிலத்தை வேளாண்மை செய்கைக்காக திங்கட்கிழமை (20) இரவு 7.00 மணியளவில் உழுது பண்படுத்தி கொண்டிருந்தபோது அங்கு புதைக்கப்பட்டிருந்த  மிதிவெடி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் , விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குறித்த மிதிவெடியை வெடிக்க வைப்பதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X