2025 மே 14, புதன்கிழமை

கோவில் புனரமைப்புத் தொடர்பில் மட்டு. அதிகாரிகள் கள விஜயம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1990களில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாகப் பாதிக்கப்பட்ட வெலிக்கந்தை, மாக்கூப்ப வெள்ளிமலைப் பிள்ளையார் கோவிலைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் குறித்த, திட்ட அறிக்கைகளைத் சமர்ப்பிக்கும்படி , பொலன்னவை மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையிலான குழுவினர், இந்த ஆலயத்தின் புனரமைப்புத் தொடர்பில், பொலன்னவை மாவட்ட அரசாங்க அதிபரை, நேற்று (05) சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட இந்துக் கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம், ரமண மகரிசி அறப்பணி மன்றத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் எம்.செல்லத்துரை உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.

மாக்கூப்ப வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம், தற்போது கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஊத்துச் சேனை கிராமத்தில் தற்காலிகமாக பிரதிஸ்டை செய்யப்பட்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X