2025 மே 17, சனிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2018 மே 27 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு - செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த புலமைப் பரிசில்கள் வழங்குதலும், கௌரவிப்பு நிகழ்வும், மேற்படி ஆலய முன்றலில் இன்று (27) நடைபெற்றது.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் பா.கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா, கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன், மண்முனைப் பற்று பிரதேச சபைச் செயலாளர் ந.கிருஷ்ணபிள்ளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைச் செயலாளர் க.லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலயத்தின் நிருவாக சபையிலிருந்து சேவையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற வண்ணக்குமார்கள் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

அத்துடன், ஆலயத்தினால் நடாத்தப்பட்ட இந்துசமய அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தகது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .