2025 மே 14, புதன்கிழமை

செயலாளர் பதவியிலிருந்து பழீல் இராஜினாமா

Niroshini   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் பதவியிலிருந்து சட்டத்தரணி எம்.ஐ.எல்.எம். பழீல் இராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்பது அரசியல் கலப்படமில்லாத பொது அமைப்பு என்பதால் அதில் இணைந்து பணியாற்றுவதில் நான் ஆர்வம் கொண்டிருந்தேன்.

ஆயினும், இந்த அமைப்பு அதன் தனித்துவத்தை இழந்து செயற்படுவதால் நான் இராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியுள்ளது.

சம்மேளனத்தில் உள்ள நிருவாக உறுப்பினர்கள் 11 பேரில் பெரும்பாலானோர் கூட்டங்களுக்கும் சமூகமளிப்பதில்லை.

அத்துடன் அரசியல் தலையீடு உள்ள நிருவாகத்தை வைத்துக் கொண்டு சம்மேளனத்தினால் பணியாற்ற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

அதேவேளை,நிருவாகத்தினால் எடுக்கப்படுகின்ற முடிவுகளை அமுல்படுத்த முடியாத நிலைமையும் காணப்படுகின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X