Suganthini Ratnam / 2016 ஜூலை 04 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிறுநீரக நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மானிய அடிப்படையில் வீடுகளை நிர்மாணிக்க மற்றும் புனரமைக்க நிதி உதவியை வழங்குவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இதற்கான பயனாளிகள் தெரிவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், திங்கட்கிழமை தெரிவித்தார்.
இதற்காக தெரிவுசெய்யப்படும் பயனாளிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், அவ்வப் பிரதேச செயலகங்களின் அறிவித்தல் பலகைகளில் 02 கிழமைகளுக்கு இடப்படும் என்பதுடன், இப்பயனாளிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பயனாளிகளாக உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
இத்திட்டத்துக்காக தெரிவுசெய்யப்படும் பயனாளிகள் ஒவ்வொருவரும் அரசாங்க வைத்தியசாலையில் இந்நோய்க்கான பதிவை மேற்கொண்டவராக இருந்தல் வேண்டும் என்பதுடன், தற்போது இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர் என்பதையும் விசேட வைத்திய நிபுணர் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பயனாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வீட்டு வசதி இல்லை என்ற அதேவேளை, காணி உள்ளது என்பதை தாங்கள் வதியும் பிரதேச செயலாளர் மூலம்; உறுதிப்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் புதிய வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக 05 இலட்சம் ரூபாய் படியும் வீடு ஒன்றை புனரமைப்பதற்காக 02 இலட்சம் ரூபாய் படியும் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் மானியதாக வழங்கப்படும். மேலும், வீட்டு வசதி இன்றிய நிலையில் கூடிய வருமானம் உள்ளவர்களும் இத்திட்டத்துக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago