Sudharshini / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலின்;டர் வெடித்ததில், குறித்த வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாக்கியுள்ளதென களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று திங்கட்கிழமை (01) மாலை, களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள செல்லையா ஜீவரத்தினம் என்பவரின் வீட்டில் எரிவாயு சிலின்;டர் திடீரென வெடித்துள்ளது.
இதில் குறித்த வீட்டிலிருந்த அனைத்து பெறுமதிவாய்ந்த பொருட்களும் சேதமாகியுள்ளதென களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
28 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
31 minute ago
46 minute ago