2025 மே 26, திங்கட்கிழமை

சுவாமி தந்திரதேவாவின் ஜனன தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2017 மே 16 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ்ஜின் 67ஆவது ஜனன தின நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜின் சிலையருகில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக தலைவர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவாமியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு விசேட பூஜைகளும் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X