2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுஹதாக்கள் தினம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலையின் 26ஆவது வருட நினைவுதினமான சுஹதாக்கள் தினம்  காத்தான்குடிப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை இடம்பெற்ற பள்ளிவாசல்களான காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசல்களில் குர்ஆன் ஓதுதல் மற்றும் விசேட துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றன.

இதில் உலமாக்கள், பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

3.8.1990இல் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசல்களில் இரவு புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் குண்டுத்தாக்குதலில் 104 பேர் கொல்லப்பட்டார்கள்.

இந்த தினத்தை வருடாந்தம் 3.8 அன்று நினைவுகூர்ந்து காத்தான்குடியில் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X