Suganthini Ratnam / 2016 ஜூலை 31 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று எதுவித தொடர்புமின்றியுள்ள தனது சகோதரியை மீட்டுத்தருமாறு அவரது மற்றுமொரு சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, தன்னார்வத் தொண்டர் நிறுவனம், ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தனது சகோதரியை மீட்டுத்தருவதற்கான முயற்சியை எவரும் எடுத்ததாகத் தெரியவில்லையெனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராமத்தில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த கந்தையா ரஞ்சிதமேரி (வயது 29) என்பவர் 2013ஆம் ஆண்டு ஜுன்; 19ஆம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். தனது சகோதரி இவ்வாறு சென்றபோதிலும், ஒருமுறையேனும் நாடு திரும்பவில்லை.
தனது சகோதரி சொந்தமாக தொலைபேசி பாவிப்பதை வீட்டு எஜமானார்; அனுமதிக்கவில்லை. அதனால், போய்ச்சேர்ந்து 06 மாதங்கள்வரை வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாமல் அவ்வப்போது தம்முடன் தொடர்புகொண்டு வந்தார். ஆனால், தற்போது தமது சகோதரியுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
சகோதரி பணி புரியும் வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினால், தனது சகோதரி பற்றிய தகவலை அவர்கள் தெரிவிக்கிறார்கள் இல்லையெனவும் அவர் கூறினார்.
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago